அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கத்தின் 10வது ஆண்டு விழா
அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவும் நூல் வெளியீட்டு நிகழ்வும் நுவரெலியா மாவட்டம் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சங்கத்தின் ஸ்தாபகர் சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜ குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள்,ஆன்மீக சேவையாளர்கள் உட்பட பல துறைகளை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு பஞ்சமூர்த்தி யாகமண்டப பூஜை,கிரக பிரவேச மங்கலம் என இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் சர்வானந்தமய பீட அதிபர் கோப்பாய் சிவம் உட்பட நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட அறநெறி மாணவர்கள்,பெற்றோர்கள் ,ஆலய குருக்கள்மார்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.