கனடாவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் காயம்
கனடாவின் எட்டோபிகோக் (etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டோபிகோக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக ரொறொன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் பலியானவர் 50 வயதுடையவர் என்றும் அவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam