இத்தாலியில் குடியேற அரிய வாய்ப்பு: மில்லியன் ரூபாய் வழங்க புதிய திட்டம்
இத்தாலியில் நகரத்தில் இருந்து கலாப்ரியா கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு (11,357,468.36 இலங்கை ரூபா) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் "கால்விரல்" என வர்ணிக்கப்படும் கலாப்ரியா, கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றதாகும்.
கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண கலாப்ரியா நிர்வாகம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இத்தாலி நகரத்தில் இருந்து கலாப்ரியா கிராமத்திற்கு குடிபெயர்பவர்களுக்கு 28 ஆயிரம் பவுண்கள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
மேலும் குறித்த கிராமத்திற்கு குடியேறுபவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளை விதித்துள்ளது,
1.குடியேறுபவர் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
2.கிராமத்தில் கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன் வர வேண்டும் என்பதுடன் 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராமப்பொருளாதாரம் சரிந்து வருவதை சமாளிக்க கலாப்ரியா நிர்வாகம் இது போன்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து வரைவுச் சட்டமூலம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் கூறியுள்ள விடயம்

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)
you may like this

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
