மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி (Photos)
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனை சாவடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்தட பொலிஸ் சோதனை சாவடியானது நேற்று(05.11.2023) மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்னவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பண்ணையாளர்கள் கோரிக்கை
மேச்சல்தரைப் பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அதனைசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சென்று பார்வையிட்டு பொலிஸாரை கடமைக்கு அமர்த்தி கடமைகளை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri