இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் ரஷ்ய தம்பதி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
200 அமெரிக்க டொலர், 96,000 ரூபா மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்தர் கெர்வியூ என்ற ரஷ்யர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் கிட்டத்தட்ட 20 அடி உயரமுள்ள சுவரில் இருந்து குதித்து 211ஆம் இலக்க அறைக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ரஷ்ய பெண்ணின் ஆடையை அணிந்து கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
