தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்: அநுர சாடல்
ஜனாதிபதி தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியவர் இன்று வீட்டுக்கு சென்றுவிட்டார் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மே தினத்தன்று கொட்டகலைக்கு வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
சம்பள உயர்வு
ஆனால் இன்னமும் அந்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. அவர் வீட்டுக்கும் சென்றுவிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
அதேபோல அடுத்த வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும்.
பொருளாதார சூழ்நிலை
மக்கள் எந்நாளும் அரசாங்க நிவாரணங்களை நம்பி வாழமுடியாது. மக்கள் சுயமாக எழுந்து நிற்ககூடிய வகையில் பொருளாதார சூழ்நிலையை நாம் உருவாக்குவோம்.

ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர்.
அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் அத்துடன், 2025 வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam