கடந்த ஏழு மாதங்களில் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது!
கடந்த ஏழு மாதங்களில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் சுமார் ஒரு இலட்சத்தி 86 ஆயிரம் பேரளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 6 ஆயிரத்து 200க்கும் அதிகமான 21 வயதுக்கு குறைவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6,064 வாலிபர்களும், 138 யுவதிகளும் உள்ளடங்கியுள்ளனர்.
அத்துடன் கடந்த ஆண்டின் ஒக்டோபர் 30ஆம் திகதி தொடக்கம் போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஒலுவில் துறைமுக நிர்மாணம் கடலரிப்பை ஏற்படுத்துமா..! ஜனாதிபதி பேசியதற்கு பதிலடிக் கொடுத்த இம்ரான் எம்.பி
கைது
அதன் ஒரு கட்டமாகவே மேற்கண்ட அளவிலான நபர்கள் பொலிசார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்துடன் கடந்த ஏழுமாத காலப்பகுதியில் ஆயிரத்து 947 கிலோ ஹெரோயின், இரண்டாயிரத்து 62 கிலோ ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெதம்படமைன் மற்றும் 289 கிலோ கொக்கேய்ன் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri