மஸ்கெலியா பகுதியில் வயிற்று வலியால் 08 வயது சிறுவன் பலி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் தரம் 04 ல் கல்வி பயிலும் சிறுவன் வயிற்றில் ஏற்பட்ட வலியால் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று(21) இடம்பெற்றுள்ளது.
குறித்த வயிற்று வலியால் துடித்த சிறுவனை அவரது பாட்டி மருத்துவமனை கொண்டு செல்ல முற்பட்ட வேளையில், எரிபொருள் இன்மையால் முச்சக்கர வண்டி ஏதும் கிடைக்காததால் பல மணி நேரத்திற்கு பிறகு 1990 ஆம்புலன்ஸ் வண்டி மூலம் மருத்துவமனை கொண்டுசென்றுள்ளார்.
இதனையடுத்து ஆம்புலன்ஸில் உள்ள தாதியர் ஒருவர் சிறுவனை பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுவன் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுவன் இறந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவனின் உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தை சிறையில் உள்ளதாகவும், தாய் தோட்டத்தில் வேலை குறைவால் கொழும்பில் பணி புரிந்து வருவதாக சிறுவனின் பாட்டி
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
