போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்றவர்கள் கைது
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா மவுசாக்கலை சோதனை சாவடியில் சோதனை செய்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கைகள்
சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக நேற்றைய தினமும்(14) இன்றும்(15) வெளி மாவட்டங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வாகனங்கள் ஊடாக வருகை தந்து கொண்டிருப்பதனால் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் நேற்றைய தினம் (13) சோதனையின் போது 03 நபர்களும் இன்றைய தினம் 14ம் திகதி ஐந்து நபர்களுமாக மொத்தம் எட்டு பேர் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து ஐஸ், கஞ்சா, போதைமாத்திரைகள், கஞ்சா கலந்த மதனமோதக்கய உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் கொழும்பு களுத்துறை, காலி, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்க்கப்பட்ட ஈரான் மீதான அழித்தொழிப்பு தாக்குதல் 4 மணி நேரம் முன்
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam