திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கோவிட் மரணங்கள் பதிவு
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளதாகவும், 81 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை நகர்ப் பகுதியில் 23 தொற்றாளர்களும், பதவிசிறிபுர பகுதியில் 13தொற்றாளர்களும், மூதூர் பகுதியில் 12 தொற்றாளர்களும், உப்புவெளி பகுதியில் 09 தொற்றாளர்களும், குச்சவெளி பகுதியில் 08 தொற்றாளர்களும், கந்தளாய் பகுதியில் 07 தொற்றாளர்களும், கோமரங்கடவல பகுதியில் 03 தொற்றாளர்களும், குறிஞ்சாங்கேணி பகுதியில் 02 தொற்றாளர்களும் தம்பலகாமம் பகுதியில் 02 தொற்றாளர்களும், சேருவில பகுதியில் 02 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 42 பெண்கள், 39 ஆண்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மூதூர் பகுதியில் 02தொற்றாளர்களும், கந்தளாய் பகுதியில் 02 தொற்றாளர்களும், குச்சவெளி பகுதியில் 01தொற்றாளரும், சேருவில பகுதியில் 01 தொற்றாளரும், உப்புவெளி பகுதியில் 01 தொற்றாளரும் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக 7 மரணங்களும் பதிவான நிலையில் திருகோணமலை மாவட்டத்தில்
மொத்த மரண எண்ணிக்கையும்
172 ஆக அதிகரித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
