கடற்றொழிலாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம்
இலங்கை(Sri lanka) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள கடற்றொழிலாளர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கமைய, நாளை வெள்ளி(28) முதல் தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தொடர் உண்ணாவிரதம்
இந்நிலையில் இன்று(27) ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீன்வளத்துறை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கைவிட கோரி கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து கடற்றொழிலாளர்கள் நாளை(28) திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



