மகனை இழந்த தாயாரின் கோரிக்கை: பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய தடை
பிரித்தானியாவில் பயங்கர கூரிய கத்திகள் அதாவது அன்றாட தேவைகளுக்கு உபயோகப்படாத வகை கத்திகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
அத்தகைய கத்திகளை பறிமுதல் செய்வதுடன், அழிக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த (29.06.2022)ஆம் திகதி, ரோனன் கந்தா Ronan Kanda, என்ற பதினாறு வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து கூரிய தாக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து வந்த வைத்திய உதவிக் குழுவினர் குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரோனனின் தாயாகிய பூஜா பயங்கர ஆயுதங்களை வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோரால் மற்ற குடும்பங்களுக்கும் இழப்பு ஏற்படாதவகையில் அவற்றை தடை செய்ய பிரதமரை தான் கோர விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பிரதமரிடம் இதுபோன்ற பயங்கர கத்திகள், வாள்கள் மக்களை கொலை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றின் விற்பனை ஏன் தடை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இந்த பயங்கர கூரிய கத்திகளுக்கு தடை விதிக்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
வீட்டு உபயோகங்களுக்கோ, வேலை செய்வதற்கோ உதவாத இந்த வகை கத்திகள், ஜாம்பி சினிமாக்களில் காட்டப்படுவதால் அவை ஜாம்பி கத்திகள் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri