வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த சிம்பாப்வே அணி: பிரையன் பென்னட்
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு, சிம்பாப்வே அணி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 56 பந்துகளில் 64 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட பிரையன் பென்னட் சிம்பாப்வேயின் துடுப்பாட்ட வியூகம் குறித்து மனம் திறந்துள்ளார்.
வெற்றிக்கான காரணம்
மைதானத்தின் ஒரு பக்க எல்லை நீளமாக இருந்ததால், அதற்கேற்ப தங்களது ஆட்டத்தை மாற்றியமைத்ததாக பென்னட் தெரிவித்துள்ளார். "பெரிய எல்லைப் பகுதியை நோக்கி சிக்ஸர்களை அடிக்க முயன்று விக்கெட்டை இழக்காமல், எங்களது கர்வத்தை ஓரம் தள்ளிவிட்டு, பந்தை தரையோடு தட்டிவிட்டு ஓட்டங்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தினோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பாப்வே அணி 169/2 என்ற வலுவான ஓட்டங்களை எட்ட தொடக்க வீரர் மருமானியின் 35 ஓட்டங்கள் அதிரடி ஆட்டம் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்களைப் பெற்றது. இது இன்னிங்ஸிற்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. B பிரிவில் இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.