எங்களை கொல்ல வந்த ரஷ்யர்களுக்கு நேர்ந்த கதி - உக்ரைன் ஜனாதிபதி ஆற்றிய உரை
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய வீரர்கள் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போரின் சேத விளைவுகளை ரஷ்யா இன்னும் தவிர்க்க முடியும் எனவும் எனினும், அதனை அடைய விளாடிமிர் புடின் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரவு நேர் உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ளா அவர்,
புடின் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை
“உக்ரைனில் ஏற்கனவே 58,500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எங்களை கொல்ல வந்து இறந்துள்ளனர். இந்த எண்ணை உங்களுக்குச் சொல்லவில்லை. சுமார் ஆறாயிரம் பேர் இறந்ததாகக் கூறப்படும் மரண எண்ணிக்கை பற்றி நீங்கள் பொய் கூறுகிறீர்கள்.
இந்தப் போரை ஒருவர் விரும்பியதால்தான் அவர்கள் அனைவரும் இறந்தனர். ரஷ்யர்களை நேரடியாக குறிப்பிட்டு உரையாற்றிய அவர், மேலும் மக்கள் சேவை செய்ய அழைக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
இந்தப் போரைத் தொடங்கியவர் போர் வீரர்களின் அணிவகுப்புடன் நிற்கமாட்டார். இன்னும் இருக்கும், மற்ற உயிர்களையும் எடுக்கவே முயல்வார். அவர் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர் உயிருள்ளவர்களையோ அல்லது இறந்தவர்களையோ மதிக்கவில்லை.
பல்வேறு பகுதிகளில் இருந்து இறந்த ரஷ்ய வீரர்களின் ஆயிரக்கணக்கான உடல்கள் உக்ரைனில் உள்ளன.
அவை வயல்களில் அழுகுகின்றன, பிணவறைகளில் சேமிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.