பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும்! உக்ரைன் ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தினால் அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் இன்றைய தினம் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜெலன்ஸ்கி மேலும் தெரிவிக்கையில், இன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
தாக்குதல் நடத்தப்படலாம்
இந்த நிலையில், அதைக் கெடுப்பதற்காக ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என தான் கவலைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளியேறும் மக்கள்
இதேவேளை ஏவுகணைத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள் தலைநகர் கீவ்வை விட்டு அவசரமாக வெளியேறி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், உக்ரைனின் அரச அலுவலகங்கள் மீது ரஷ்யா எதிர்வரும் நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என நேற்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.