ரஷ்ய தாக்குதலின் அதி தீவிரம்: நேட்டோவுக்கு உக்ரைன் அழைப்பு
உக்ரைனின் சில பகுதிகளை நேட்டோ அமைப்பானது, அதன் கீழ் எடுத்து, போரின் அதி தீவிரத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதிகளை இராஜதந்திர வழியில் திரும்பப் பெற பேச்சுவார்த்தை நடத்த நேட்டோ அமைப்பு முயற்சி செய்யலாம்.
பேச்சுவார்த்தை பரிந்துரை
எனினும் இந்த பரிந்துரையை இதுவரை யாரும் விடுக்கவில்லை. யாரும் அத்தகைய பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பையும் வழங்கவில்லை.
ஏராளமான மக்கள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் ரஷ்யா மீண்டும் தாக்குவதைத் தடுப்பதற்கான வழிமுறை இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் போர் நிறுத்தம் என்பது மிகவும் ஆபத்தானது.
இவ்வாறான ஒரு பின்னணியில் நேட்டோ உறுப்பினர்கள் மட்டுமே அத்தகைய உத்தரவாதத்தை வழங்க முடியும்.
உக்ரைனின் நட்பு நாடுகள்
உக்ரைனின் நட்பு நாடுகள் போதுமான உறுதியைக் காட்டினால், அடுத்த ஆண்டில் போர் முடிவுக்கு வரும்.
எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கத்திய வட்டாரங்களில் இது தொடர்பான விவாதம் நடந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |