இலங்கையிலிருந்து எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை – சாதனை வீரன் யுபுன்
இலங்கையிலிருந்து தமக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை என குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ரெஸிஸ்பிரின்ட் சர்வதேச போட்டியில் யுபுன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்தப் போட்டியில் தெற்காசிய வீரர் ஒருவர் வரலாற்றில் பதிவு செய்த மிகச் சிறந்த நேரப் பெறுமதியை யுபுன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவிய அனைவருக்கும் நன்றி
100 மீற்றர் தூரத்தை பத்து செக்கன்களுக்குள் யுபுன் ஓடி முடித்திருந்தார். தமக்கு உதவுமாறு பல்வேறு தடவைகள் மின்னஞ்சல் மூலம் கோரிய போதிலும் இதுவரையில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என யுபுன் தெரிவித்துள்ளார்.

ஓட்டப்போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னர் முகநூலில் இட்டுள்ள காணொளிப் பதிவில் இலங்கை அதிகாரிகளை அவர் சாடியுள்ளார்.
தமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யுபுன் 100 மீற்றரை 9.96 செக்கன்களில் ஓடி முடித்துள்ளார்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri