7ஆவது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி
உகண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் போலியானவை
National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam