கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் வீட்டில் குழாய் கிணறு அமைத்த இளைஞர்கள்
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (27.05.2023) பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்கு குழாய் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மிருசுவில் மக்களால் நேற்றைய தினம் (30.05.2023) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமி விழுந்து மரணித்த பாதுகாப்பற்ற கிணற்றை இடித்து மணல் நிரப்பி இளைஞர்கள் மூடியுள்ளனர்.
முன்னோடியான செயற்பாடு
நேற்று முன்தினம் திடீர் முடிவெடுத்த இளைஞர்கள், ஊர் மக்களின் நிதி உதவியை பெற்று இக்குழாய்க்கிணறு அமைத்து கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மிருசுவிலைச் சேர்ந்த 6
வயதுடைய சசிகரன் கிங்சிகா என்ற மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன்
பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
