முகமூடி அணிந்து பேருந்து மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது
வவுனியா - முருகனூர் பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முகமூடி அணிந்துக்கொண்டு வந்த இந்த இளைஞர்கள், பேருந்தை தாக்கியுள்ளதுடன், பேருந்தில் இருந்த சாரதி மற்றும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவும் என்ற காரணத்தினால், குறித்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை தமது கிராமத்திற்கு அழைத்து வர வேண்டாம் எனக் கூறி இந்த இளைஞர்கள், முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர்.அப்போது அந்த பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
