டிக்டொக் காதலியை காண சென்ற திருகோணமலை இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஒருவர், நுவரெலியா பசுமலையில் வசிக்கும் தனது டிக்டொக் காதலியான பாடசாலை மாணவி ஒருவரை காண சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி, தந்தையை இழந்தவர் எனவும் அவரது தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தனது சிறிய தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் வீட்டிற்கு திடீரென வந்த இளைஞனின் நடத்தையால் அயல் வீடுகளில் வாழும் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட, விடயம் தொடர்பில் அவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது
அதனையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார், இளைஞனை விசாரித்த போது, அவரின் பேச்சில் தடுமாற்றம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், இளைஞனிடம் தேசிய அடையாள அட்டையும் இருக்கவில்லை. எனவே, பொலிஸார் இளைஞனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri