யாழில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் இளைஞர் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம்- ஆவரங்கால் பகுதியில், சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பகுதியில் நேற்று(12.6.2026) வழமையான வீதிக் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த அச்சுவேலி குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாராலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மேற்படி இளைஞரை மறித்துச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

மேலும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam