பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதியான விசாரணை வேண்டும்: சரவணபவன்

Jaffna E Saravanapavan Sri Lanka Police Investigation
By Kajinthan Nov 20, 2023 01:31 PM GMT
Report

பொலிஸாரின் தடுப்புக்காவல்களில் இடம்பெற்ற கொலைகளில் இறந்தவர்களுக்கான நீதி எந்தவொரு இடத்திலும் நிலைநாட்டபடவில்லை. பொலிஸ் திணைக்களம் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு திணைக்களமாக தான் தமிழ் மக்கள் பார்த்து வருகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

சித்தங்கேணி பகுதியில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்த இளைஞன் குறித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவச் செயல் : கொந்தளிக்கும் கிரிக்கெட் உலகம்(Video)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவச் செயல் : கொந்தளிக்கும் கிரிக்கெட் உலகம்(Video)

தமிழ் மக்களின் நீதி

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இந்த இடத்திலும் நீதி நிலைநாட்டபடாது போய்விடும் என்ற அச்சம் தான் எமக்கு எழுகின்றது. ஏனென்றால் பொலிஸ் திணைக்களத்தினை தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பான திணைக்களமாக ஒரு பொழுதும் கருதியது கிடையாது.

தமக்கு பிச்சை போடுகின்ற ஏவாலாளர்களின் கட்டளையினை நிறைவேற்றுகின்ற திணைக்களமாக தான் மக்கள் பொலிஸ் திணைக்களத்தை அவதானித்து வருகின்றார்கள்.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதியான விசாரணை வேண்டும்: சரவணபவன் | Youth Tortured Died Police Custody Wants Justice

அவ்வாறானதொரு திணைக்களம் தமிழ் மக்களின் நீதியை நிலைநாட்டும் என்பதில் எந்த ஒரு துளியும் நம்பிக்கை இல்லை. இந்த சம்பவத்தில் தெட்டத்தெளிவாக அவர் உயிரிழப்பதற்கு முதல் வழங்கிய வாக்குமூலம் சரி உறவினர்களின் வாக்குமூலம் சரி அனைத்துமே அவர் பொலிஸாரது தடுப்பு காவலில் அவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகதிற்கிடமின்றி காணப்படுகின்றது.

இங்கே பொலிஸார் இருவர் விசாரணைக்காக இடமாற்றம் செய்யபடுதல் என்பது ஒரு வழமையான விடயம். அதாவது விசாரணைக்கான ஆரம்ப நடைமுறை விடயம். ஆனால் இங்கே ஒரு சம்பவத்தின் அதிரவலை எழுகின்ற பொழுது அதன் கண்துடைப்புக்காக நகர்த்தி விட்டு பின்னர் மக்கள் அதனை கடந்து செல்லுகின்ற பொழுது அதனை அப்படியே பேசாது விடுகின்றமையே இங்கே நடந்து வருகின்றது.

தடுப்பு காவல்

அதாவது தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தினை தான் பொலிஸ் திணைக்களம் செய்துவருகின்றது.இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராட முனைகின்றோம்.

பொலிஸாருடைய செயற்பாட்டினை எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாது. அவர் சந்தேகநபராக இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அவர் சந்தேக நபர் தான். சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் சித்திரவதை செய்யலாம் என்ற எந்த ஒரு அதிகாரமும் இல்லை. தமிழர்கள் என்ற காரணத்திற்காக அத்துமீறி செயற்படுகின்றார் கொழும்பில் கூட அண்மையில் ஒரு தமிழ் பெண்மணி பொலிஸ் தடுப்பு காவலில் இறந்திருந்தார்.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதியான விசாரணை வேண்டும்: சரவணபவன் | Youth Tortured Died Police Custody Wants Justice

தமிழ் மக்கள் மீதான சத்தம் இல்லாத அட்டூழியத்தைபொலிஸார் நிகழ்த்தி வருகின்றனர் இங்கே நாம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதிலேயோ அல்லது கண்டன குரல் எழுப்புதுடனோ இதனை கடந்த போகமுடியாது. முழுமையான விசாரணை முடியும் வரைக்கும் நாங்கள் அனைத்து தரப்புக்களும் அவதானம் செலுத்த வேண்டும்.

வித்தியாவின் படுகொலை வழக்கில் எவ்வாறு தொடர்சியாக நீதிக்கான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டபட்டதோ அவ்வாறு இங்கும் நீதி நிலை நாட்டபடவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் மரணம் : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை (video)

யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் மரணம் : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை (video)

ராஜபக்சக்களைத் தூக்கிலிட வேண்டும்! மகிந்தவுக்கு சஜித் அணி பதிலடி

ராஜபக்சக்களைத் தூக்கிலிட வேண்டும்! மகிந்தவுக்கு சஜித் அணி பதிலடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US