முல்லைத்தீவில் திடீரென மாயமான இளைஞர்: பொலிஸார் தீவிர விசாரணை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில காணாமல் போன இளைஞரின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(25.01.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன இளைஞரை, வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர், இளைஞர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது தயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணை
இவரது முறைப்பாட்டையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன குறித்த இளைஞரின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் அவரது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காலணியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன இளைஞர், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவர் என்றும் தெரியவந்துள்ளது.




குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam