வவுனியா குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்! அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை (Photos)
வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் இன்று (19.03) காலை மீட்கப்பட்டிருந்தது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இளைஞனின் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

பொலிஸார் கோரிக்கை
25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுவதுடன், இடது கையில் அம்மா என பச்சை குத்தியுள்ளார்.
கழுத்தில் சிவப்பு நூலும், ஒரு கையில் ஆலய நூலும், மற்ற கையில் நீல பட்டியும் அணிந்துள்ளார்.

எனவே, இவ் இளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் வவுனியா குற்றத் தடுப்பு
பிரிவு அல்லது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார்
கோரியுள்ளனர்.

இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan