மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு (PHOTOS)
இந்தியா - கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் - பாலக்காட்டையை சேர்ந்த 28 வயதுடைய பாபு எனும் இளைஞரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு 3 நண்பர்களுடன், நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர்.
இதன்போது மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்துள்ளதுடன்,அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றுள்ளதுடன், இளைஞன் சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியாத நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது.
நீண்ட நேரத்திற்கு பின்னர் வாலிபர் சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டு உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 43 மணி நேரமாக போராடிய பாபுவை மலையேற்ற பயிற்சி பெற்ற இராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.



மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
