யாழில் பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்த இளைஞன்: அமைச்சர் டக்ளஸ் கவலை
கடுமையான குற்றவாளிகள் கூட நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் நாகராஜா அலெக்ஸ் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,
உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்
“சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி விசாரணைக்கு முன்பாகவே மரணத்தை தழுவியுள்ளார்.
இது நடந்திருக்கவே கூடாத கொடிய துயர் நிகழ்வு. இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன. உண்மைகள் கண்டறியப்பட்டு நியாயங்கள் உணர்த்தப்பட வேண்டும்.
மரணமடைந்த இளைஞனின் குடும்பத்தவர்களுடைய இழப்பின் வலிகளில் பங்கெடுக்கின்றேன். ஆறுதலும், ஆழ்மன அஞ்சலியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டுக்கே சவாலாக மாறியுள்ள மின் உற்பத்தி...! ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



