யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த கதி!
யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த செ.பிரசாந்தன் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19) மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri