1984 ஆண்டு 2600 வருடம் பழமையான மக்கள் என நிரூபிக்கப்பட்ட தமிழ் பூர்வீக குடிகள் யாழில்
யாழ்ப்பாணம் - செம்பியன்பற்று பகுதியில் நண்பர்களுடன் படகில் சென்று கொண்டிருந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரழந்த இளைஞர் பொழுதுபோக்காக நண்பர்களுடன் படகில் கடலுக்கு சென்றுள்ளார். இதன்போது படகு இயந்திரத்தின் சுழலி வெட்டியதில் படுகாயமடைந்த அவர் படகு பயணித்துக் கொண்டிருந்த போது தவறி கடலிற்குள் விழுந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சுழியோடிகளின் துணையுடன் சுமார் மூன்று மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின் அவர் மீட்கப்பட்டு உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வடமராட்சி கிழக்குப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam