வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்து மின்சாரத்தூணுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணி கரடிப்புலவு பகுதியை சேர்ந்த தயாபரன் (வயது 31) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளதுடன், மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam