நாயாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தங்கபுரத்தினை சேர்ந்த இளைஞர் பலி
முல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குத்தொடுவாயில் இருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து நாயாற்று பாலத்தில் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது குறித்த மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் பாலத்தில் மோதி படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் அளம்பில் - தங்கபுரத்தினை சேர்ந்த 26 வயதுடைய இராசன் மோகன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அதேபகுதியை சேர்ந்த 56 வயதுடைய கோபால் புஸ்பராசா என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri