புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
புத்தளம் - 10ஆம் கட்டை, நாகமடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28.02.2024) காலை இடம்பெற்றள்ளது.
எலுவாங்குளம், இறால்மடுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜரத்னம் சஞ்சீவ சம்பத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த இளைஞர் இன்று(28) காலை மிளகாய்ச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவிட்டு மின்சார இணைப்பை நிறுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பதில் நீதவான் பாரிஸ் மரிக்கார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri