யாழில் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்களை குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு, வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
80 இலட்சம் ரூபாய்
இதனை நம்பி, சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதிக்குச் சென்ற இளைஞனை காரில் கடத்திச் சென்ற குறித்த குழு, இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்த 80 இலட்சம் ரூபாய் பணத்தை மற்றுமொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு இளைஞரை கோப்பாய் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்கிற்கு உரித்தான பெண்ணொருவரை கைது செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூவரை கைது செய்துள்ளனர்.
தீவிர விசாரணை
இந்நிலையில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பணத்தை மீட்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான நான்கு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        