திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் படுகாயம்
திருகோணமலை- கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(31) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிண்ணியா பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளான கிண்ணியா மாலிந்துரை பகுதியை சேர்ந்த இளைஞன் எனவும் தெரியவருகிறது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
