வாயு துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் காயம்: திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலையில் வாயு துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா பகுதியில் இன்று (22.09.2023) இடம் பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கன்னியா - கிளிகுஞ்சுமலை நான்காவது ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய சிவசுப்பிரமணியம் சத்தியவாசன் என்பவ இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்
குறித்த இளைஞர் வீட்டில் இருந்து 2.40 மணியளவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் துப்பாக்கிச்சுட்டு சம்பவம் யாரினால் நடாத்தப்பட்டது பற்றிய விபரம் கிடைக்கவில்லை எனவும் காயமடைந்தவரின் கால் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும் அப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதினால் குரங்குக்கு வைக்கப்பட்ட சூடு குறித்த இளைஞருக்கு பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |