அதிகளவு ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு
அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளை பாவித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற இளைஞனே நேற்று (20.01.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் கைது
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நபர் நீர்வேலியில் உள்ள உறவினரது வீட்டில் தங்கியிருந்து அதன்பின்னர் நேற்றையதினம் தனது ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இருப்பினும் மேற்கொண்ட உடற்கூற்று பரிசோதனையின் போது , இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri