தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மகனை தேடி அலைந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(25.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிப்பு நோயால் நேர்ந்த கதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம்(25) சுமாராக 3.00 மணியளவில் தூண்டில் சகிதம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞர், வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை தேடிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று(26) காலை கல்விளான் குளத்தில் குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், கல்விளான் பகுதியைச் சேர்ந்த கண்ணையா அன்பரசன் (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இளைஞருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், மீன்பிடிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல் - ஷாண்