மூதூர் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் காயம்
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (24.10.2026) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முந்திச்செல்ல முயற்சி
மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர் மூதூர் - ஆலிம்சேனையைச் சேர்ந்த நளிபுத்தின் முகம்மது நசீத் (வயது 17) என தெரியவருகிறது.

இளைஞர்கள் இருவர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். இதன்போது லொறியின் பின்பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு லொறியின் சில்லில் சிக்குண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
விசாரணை
மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 17 வயதான இளைஞன் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
