மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு
திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது நேற்று(23.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்து
கித்துலூத்துப் பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாகப் பயணித்த உயர் ரக ரேசிங் (Racing) மோட்டார் சைக்கிளும், திருகோணமலையிலிருந்து கபரணை நோக்கி பயணித்த இந்தியத் தம்பதியினரின் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
காரில் மோதிய மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறியதுடன், கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றாகச் சாம்பலாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காரை ஓட்டி வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளான கார் ஓட்டுநரின் மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
நீட் தேர்வு பிரச்சனைக்காக போராடும் மாணவர்களுக்கான நடிகர் சூர்யா எடுத்த முடிவு... என்ன தெரியுமா? Cineulagam