தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் செலவழிக்கப்பட்ட 500 மில்லியன் தொகை! விசாரணையில் அம்பலம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செலவழிக்கப்பட்ட ரூபா. 538.79 மில்லியனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறவிட்டுக் கொள்ளுமாறு தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய தணிக்கை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓகஸ்ட் 2024 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு இந்த பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
அரசாங்க பெறுகைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள், விதி முறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் "இளைஞர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பது" என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட 6 திட்டங்களின் ஒழுங்குமுறை, செயல்திறன் மற்றும் அதன்பயன் குறித்து ஆராய்ந்த சிறப்பு தணிக்கை அறிக்கையிலே இந்தப் பரிந்துரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலப்பகுதியில், "இளைஞர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பது" (Smart Youth) புத்தாண்டு விழா, தேசிய இளைஞர் வெசாக் விழா, தேசிய இளைஞர் பொசன் விழா, இளைஞர் ஒன்றுகூடல், ஆண்டு நிறைவு 31வது இரவு இளைஞர் கொண்டாட்டம் மற்றும் ஸ்மார்ட் இளைஞர் கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்காக ரூ. 538.79 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது, அதில் ரூ. 45.29 மில்லியன் நிலுவைத் தொகையாக உள்ளது. இந்த திட்டங்கள் எதுவும் இளைஞர் மன்றத்தின் முன்னுரிமைப் பணிகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும், அவை வருடாந்த செயல் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது.
இந்த நிகழ்ச்சிகளுக்காக ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்ட 496.25 மில்லியன் ரூபாயில், மன்றத்திற்கு ரூ. 74.20 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள ரூ. 464.59 மில்லியன் மன்றத்தின் வருடாந்த மூலதன ஒதுக்கீட்டில் செலவிடப்பட்டுள்ளது.





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
