ஹொட்டலுக்கு செல்லும் வழியை கூறாததால் ஏ.எஸ்.பியை தாக்கிய இளைஞர்கள்
ஹொட்டலுக்கு செல்லும் வழியை கூறவில்லை எனக்கூறி உதவி பொலிஸ் அத்தியட்சகரை தாக்கிய இரண்டு இளைஞர்களை கல்கிஸ்சை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு பதிலளிக்காது முன்நோக்கி நடந்து சென்ற ஏ.எஸ்.பி
உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிவில் உடையில் அவரது நண்பனை சந்தித்து இரவு உணவை சாப்பிட்ட பின்னர், பேருந்தில் ஏறுவதற்காக காலி வீதிக்கு வருவதற்காக டி சேரம் வீதி வழியாக நடந்து வந்துள்ளார்.
அப்போது கார் ஒன்றில் வந்த இரண்டு இளைஞர்கள் ஹொட்டல் பெயர் ஒன்றை கூறி அங்கு செல்வதற்கான வழியை கேட்டுள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் என்பதால், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு பதிலளிக்காது முன்நோக்கி நடந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய இளைஞர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகரை தாக்கியுள்ளனர். உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இருந்த வோக்கி டோக்கி இதன் போது காணாமல் போயுள்ளது. எனினும் பின்னர் அதன் மின் கலம் மற்றும் அன்டனாவை பொலிஸார் தேடி கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 20 மற்றும் 25 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொரலெஸ்ஸ மற்றும் அத்திட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
