வவுனியாவில் இளைஞர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா(Vavuniya)- தவசிகுளம் பகுதியில் விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.
இளைஞர் மீது தாக்குதல்
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.
இதன்போது குறித்த மைத்தானத்திற்குள் வந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வுக்கு வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.
காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |