யாழில் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம்! பிரதான சந்தேக நபரை கைது செய்யாத பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை 08 மாதங்கள் கடந்தும் பொலிஸார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதான சந்தேக நபருக்கும் வடக்கில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதனால் , பொலிஸார் அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்நபரை கைது செய்ய முயற்சித்த வேளையிலும் , உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அந்நபரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , தமது நலன் சார்ந்து மூத்த சட்டத்தரணி ஒருவரை நியமித்து, அவர் ஊடாக யாழ் . நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்து ,பொலிஸார் பிரதான சந்தேக நபரை 08 மாத காலம் கடந்து கைது செய்யாது , அசமந்தமாக செயற்படுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இளைஞன் மீது தாக்குதல்
அதனை அடுத்து குறித்த சந்தேகநபரை இதுவரையான கால பகுதி வரையில் கைது செய்யாதமைக்கான காரணம் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது.
இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
பொலிஸாரின் அசமந்த போக்கு
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 பேரை பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர்.
அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை பொலிஸார் 08 மாத கால பகுதி கடந்தும் இதுவரையில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
