வவுனியாவில் தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது
வவுனியாவில் இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக பயணித்த கார் ஒன்றினை அடித்து சேதப்படுத்தி அதில் பயணித்த தமிழ் இளைஞர்கள் மீது அப்பகுதியில் இளைஞர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பொலிஸார் விசாரணை
குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ்.ஐஸ்கிறீம் வீதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு முஸ்லிம் இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |