கைத்துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் இளைஞர் கைது
9 மி.மீ கைத்துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (29.06.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான சந்தேகநபர், வஸ்கடுவ பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் மீட்பு
அத்துடன் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட 8 கிராமுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளும், அதன் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 98000 ரூபா பணமும் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி வேறொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தத் துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறியவும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.