வவுனியாவில் டி56 ரக ரவைகள் மற்றும் பாேதைப் பாெருளுடன் இளைஞன் கைது
வவுனியாவில் டி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை
இந்நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையி்ன் போது காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், டி56 துப்பாக்கி 13 ரவைகள் மற்றும் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைது செய்யப்பட்டவரிடம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan