யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்(Photos)
யாழ்ப்பாணம்- கொடிகாமம் மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னத்தை ஒத்த ஆடை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த இளைஞனை இன்று(29.11.2023) சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
கடந்த திங்கட்கிழமை 27ஆம் திகதி மாவீரர் தின நாள் அன்று கொடிக்காமத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக இளையர் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத தடையை அறிவித்த ஐ.சி.சி : தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


