மூதூரில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(24.6.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2300 மில்லி கிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் இந்தப் பகுதியில் நீண்டநாட்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளையும் மூதூர் நீதவான் முன்னிலையில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.