புதுக்குடியிருப்பில் தடை செய்யபட்ட பொருளுடன் இளைஞரொருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்ததிருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த 455 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது இன்று (23) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு மந்துவில் பிரதேசத்தில் இரவு 7.30 மணியளவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவரிடம் இருந்து 455 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் பயணித்த உந்துருளியும் அதிரடிப்படையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளது.
உப்புமாவெளி அளம்பில் பகுதியினை சேர்ந்த 26 அகவையடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருவதாக தெரிவித்துள்ளனர்.



