முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பொலிஸார் நடத்திய சோதனையில், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு 02 ஆம் வட்டாரம் கோம்பாவில், கர்ணன் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர்களிடமிருந்து 28 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்த சோதனை நடவடிக்கையானது, புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் மேலதிக விசாரணைகளின் பின் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 13 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
